உத்தரகாண்ட் மாநிலம், இமயமலையின் அடிவாரத்தில் உள்ள கங்கைக்கரை நகரமான ரிஷிகேஷில் கார்த்திகேய ஆஸ்ரம் உள்ளது. இந்த ஆஸ்ரமத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் திருவுருவச்சிலைகள் நிறுவப்பட்டு, திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறுகிறது.
ஜூன் 6 ந்தேதி (செவ்வாய்கிழமை) விக்னேஸ்வர பூஜை, யாகபூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து தேவார இசை பாடப்படும். 7 ந்தேதி புதன்கிழமை தமிழில் இரண்டாம் கால வேள்வி பூஜைகளும், பல்வேறு யாகசாலை பூஜைகளும் நடக்கிறது. தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற இருக்கிறது.
தொடர்ச்சியாக அன்னதானம் நடைபெறுகிறது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. விழா ஏற்பாடுகளை கார்த்திகேய ஆஸ்ரம டிரஸ்ட் உறுப்பினர்கள், சுந்தரானந்தா சாமிகள் செய்து வருகிறார்கள்>.