இரண்டாவது குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்க மனு

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் 9 ஊராட்சிகளில் உள்ள 185 கிராமங்களுக்கு மூலையூர் பகுதியில் ஆற்று நீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது இந்த நீரில் மேட்டுப்பாளையம் சிறுமுகை ஆலைகளில் வெளியேற்றப்படும் கழிவுகள் அதிக அளவில் கலக்குவதால் பயன்படுத்தபடும் நீர் மிகவும் அசுத்தமாவதால் பொது மக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாலும் மற்றும் பெள்ளேபாளையம் ஊராட்சியில் பொதுமக்கள் சாலை மறியல் செய்ததையொட்டியும் இதற்கு தீர்வு காணும் விதமாக திருப்பூர் 2வது குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்க வேண்டி பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ்குமார் அழைப்பின் பேரில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அ.ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசரப் அலி, காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சு.சுரேந்திரன் ஆகியோருடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர் இதுகுறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் விரைவில் ஆய்வு மேற்கொண்டு தீர்வு காணுவதாக கூறினார்
Previous Post Next Post