ஒரிசா ரயில் விபத்து விஞ்ஞானத்திற்கு விடப்பட்ட சவால்

ஒரிசா ரயில் விபத்து விஞ்ஞானத்திற்கு விடப்பட்ட சவால்! சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேதனை தெரிவித்துள்ளார் உலகிலேயே தலைசிறந்த போக்குவரத்து சேவைகளில் இந்தியாவின் ரயில் சேவையே சிறந்தது என்று போற்றப்படுகின்ற நிலையில் கடந்த பல ஆண்டுகளாக எந்தவொரு பெரிய விபத்துக்களும் இன்றி சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஒரிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து மிகப்பெரிய பின்னடைவை இந்திய ரயில்வே துறைக்கு ஏற்படுத்தி விட்டது என்பது உறுதி குறிப்பாக புல்லட் ரயில்கள், வந்தே பாரத் என்னும் அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு சிறப்பாக சென்று கொண்டிருக்கின்ற சூழலில் சிக்னல் பிரச்சனை காரணமாக மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன என்னும் செய்தி ரயில்வே நிர்வாகத்திற்கு விடப்பட்ட பெரும் சவாலாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் கவனக்குறைவு எந்த மட்டத்தில் ஏற்பட்டிருந்தாலும் அது களையப்பட வேண்டும் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை அவசியமாகும் மேலும் பாதுகாப்பான பயணம், சிறந்த சேவை,பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் செல்வதற்கு ஏற்ற போக்குவரத்து என்ற பெருமைமிக்க இந்திய ரயில்வே சேவை இனியும் இப்படி ஒரு ஆபத்து ஏற்படாத வண்ணம் தடுத்து எப்போதும் எச்சரிக்கையுணர்வுடன் காக்கப்பட வேண்டும் அதிவேக ரயில்கள் இயக்கின்ற பொழுது கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் பல இடங்களில் சரக்கு ரயில்கள் பெரும் வருவாயை கொடுப்பதாக கூறி சரக்கு ரயில்களுக்கு கொடுக்கின்ற முன்னுரிமை பயணிகள் ரயிலுக்கு கொடுக்கப்படாமல் இருப்பதும் வருத்தம் அளிக்கிறது இந்த விபத்தை பொறுத்தவரை இரண்டு ரயில்கள் எதிர் எதிர் திசையில் அருகருகே உள்ள தண்டவாளங்களில் மிகுந்த வேகத்துடன் வருகின்ற பொழுது சரக்கு ரயில் சற்று சிறிது நேரம் நிறுத்தி வைத்து, பிறகு அதிவேக ரயில்கள் சென்ற பிறகு இயக்கப்பட்டு இருக்கலாம் அதுவும் செய்யாமல் நேரமும் மாற்றி அமைக்கப்படாமல் சரக்கு ரயில்களை இயக்குவது தவறு இனியாவது ரயில்வே துறை அதிவேக ரயில்கள் வருகின்ற பொழுது சரக்கு ரயில் சேவையை நிறுத்தி வைக்க வேண்டும் ரயில்வேக்கு வருவாயை விட பயணிகளின் பாதுகாப்பே முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாகும் இந்திய ரயில்வேயின் சோதனையான நேரத்தில் தவறுகளை சுட்டிக் காட்டுவதோடு நிறுத்தி, எதிர்காலத்தில் விபத்துகளே ஏற்படாத வண்ணம் மன அளவிலும், செயலளவிலும் ரயில்வே நிர்வாகம் செயல்பட நாம் அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்று அறிக்கையில் சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
Previous Post Next Post