வீடு புகுந்து திருடிய வழக்கில் மூவர் கைது சூலூர் முத்துக்கவுண்டர்புதூர் ரயில்வே பீடர் ரோட்டில் குடியிருப்பவர் தங்கராஜ் (31)ஜவுளி வியாபாரி வெளியூர் சென்று விட்டு திரும்பிய போது வீட்டை உடைத்து நகை பணம் மற்றும் எல்இடி டிவி மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டு இருந்தன அதிர்ச்சியடைந்த அவர் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் உடனே விசாரணையை துவக்கிய போலீசார் அப்பகுதியில் குடியிருக்கும் பரமக்குடியை சேர்ந்த கணேசன் (25) சுப்ரமணி(27) பாளையங்கோட்டை தினேஷ்(23) நயினார்கோயில் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இதில் சுப்ரமணி மீது பாளையங்கோட்டையில் ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது