திருப்பூர் மாநகராட்சி சார்பில் எஸ்.ஆர்., நகரில் ஹேப்பி சண்டே நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.
செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பணவர், சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயன், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் கொங்கு சலங்கை ஆட்டம், கும்மி ஆட்டம், சிலம்பம், காவடி, நாட்டுப்புற பாடல்கள் இடம் பெற்றன. மேலும் எஸ்.ஆர்., நகர் மெயின் ரோடு முழுக்க பல்வேறு விளையாட்டுகள் இடம் பெற்றன. கயிறு இழுத்தல், பரமபதம், உள்பட பல்வேறு வகையான விளையாட்டுகள் இடம்பெற்றன. ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெண்கள், பொதுமக்கள் பங்கேற்று விளையாடினார்கள்.
மேலும் ஆங்காஙகே வீதிகளில் கலை க்குழுக்கள் சார்பில் நடந்த நடனம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்று மகிழ்ந்தனர.