கே.வி.குப்பதில் சந்தைமேடு பகுதியில் திங்கட்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று வழக்கம் போல் காலை சந்தை கூடியது. வருகின்ற 29 ஆம் தேதி பக்ரித் பண்டிகை என்பதால் ஆடுகள் வரத்து காலை 4 மணியிலிருந்தே தொடங்கியது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலத்தில் இருந்தும், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்தும் ஆயிரத்திற்கம் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டது. மார்ஷ்லா ரக ஆடுகள், நெல்லூர் ஜீடிப்பி ரக ஆடுகள், செம்மறி ரக ஆடுகள்,
கசாயம் ஆடுகள், குட்டி ஆடுகள் ,
மயிலைம்பாடி ரக ஆடுகள்,
சீனிகிடாய் ரக ஆடுகள்,
வெள்ளாடுகள்,
பெங்களூர் ஜமுனாபாரி ரக ஆடுகள் என பல ரகங்கள் கொண்ட ஆடுகள் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் கொண்டுவந்தனர். ஆடுகள் மந்தையாக மந்தையாக லோடு வேன் மூலம் கொண்டுவரப்பட்டது. ஆட்டுசந்தை நடைபெறும் கே.வி.குப்பம் சந்தைமேடு , காட்பாடி - குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை ஓட்டி உள்ளதால், வழி நெடுக நீண்ட வரிசையில் லோடு வேன்கள் நின்று கொண்டிருந்தது. காலை 8 மணியளவிலிருந்து 10 மணி வரை போக்குவரத்து நெரிசலுடன் அப்பகுதி காணப்பட்டத
கொண்டுவரப்பட்ட ஆடுகள் பெரும்பாலும் கை வளர்ப்பு ஆடுகளை என்பதால் சிலர் விற்கும் போது அழுதுகொண்டே விற்றனர். சராசரியாக ஆடுகளின் விலை ரு.40 ஆயிரம் வரையும் , சில ஆடுகள் விலை 80 ஆயிரம் வரையும் சில செம்மறி ரக ஆடுகள் விலை 90 ஆயிரம் வரை அதில் ஒரு ஜோடி ஆடு 2 லட்சம் வரை விலைப்போனது. அதிகபட்சமாக ஒரு ஆட்டின் விலை 1 லட்சம் வரை போனதால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றனர். பல மாதங்களுக்கு பின் ஆட்டின் விலை பல மடங்கு அதிகமாக உயர்துள்ளதாகவும், பக்ரித் பண்டிகை என்பதால் நன்பகல் வரை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.