கே.வி.குப்பத்தில் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்கள்

கே.வி.குப்பம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.



வேலூர் மாவட்டம் கே‌.வி.குப்பம் வட்டாரத்தில், வட்டார  வேளாண்  துறையின் ,  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி  வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கான சிறப்பு முகாம் அந்தந்த கிராமங்களில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கான வேப்பூர், மாச்சனூர், கொத்தமங்கலம், மாளியாபபட்டு, காளாம்பட்டு, திருமணி, அன்னங்குடி, கொவன்புதூர் ஆகிய கிராமங்களில் தோட்டகலை, வேளாண் வளர்ச்சி துறை, வேளாண் வணிக துறை, பட்டு வளர்ச்சி  துறை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்கள் நுறை சார்ந்த திட்டங்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். முகாமில்  விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை பெற ஆவணங்களை உழவன் செயலியில் பதிவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. தரிசு நில தொகுப்பு  அமைப்பதற்கு விவசாயிகளுடன் கலந்துரையாடல், உழவன் செயலியின் முக்கியத்துவம் பற்றியும்,  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டம் வேளாண் வளர்ச்சித் திட்டத்தை பற்றியும், திட்டத்தின் நோக்கமான ஒட்டமொத்த கிராமத்தின் வேளாண் வளர்ச்சி உள்ளிட்ட குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாம்களை வட்டார  வேளாண் உதவி இயக்குநர் வினித் மேக்டலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது, 

வேளாண்மை அலுவலர் (வணிகம்), லீலாவதி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த முகாமில் நூற்றுக்கணக்கான  விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்
Previous Post Next Post