புதுமுக பெண் இயக்குனர் நிவேதா சந்தோஷ் இயக்கத்தில் Anu Film production தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக வருவேன் உனக்காக திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்க விழா சென்னையை அடுத்த பொழிச்சலூர் கள்ளியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
இசையமைப்பாளர் ஆனந்த்தேவே இசையில் புதுமுக கதாநாயகன் பிச்சாண்டி மற்றும் கதாநாயகி மது இந்தனோ நடிக்கும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் சேலம் ஆர்ஆர் பிரியாணி நிறுவனர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்...
முன்னதாக ஆலய வளாகத்தில் நடைபெற்ற பட பூஜையினை பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜா தயாளன், சேலம் ஆர்ஆர் பிரியாணி நிறுவனர் தமிழ்ச்செல்வன் கிளாப் அடித்து துவக்கி வைத்தனர்...
மேலும் இந்த துவக்க விழாவின்போது படத்தின் தயாரிப்பாளர்கள் தனசேகர்,திரை பிரபலங்கள் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படத்தின் இயக்குனர் நிவேதா சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...