கலைஞர் நூற்றாண்டையொட்டி, தமிழகம் முழுவதும் 100 மையங் களில், பன் நோக்கு சிறப்பு முகாம் நடத்திட ,தமிழக அரசு உத்தரவிட்ட தின்பேரில்,ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழா சிறப்பு பன் நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமினை, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திவ்யா பிரியதர் ஷினி தலைமையில், சத்தியமங்க லம் நகர மன்ற தலைவி ஜானகி ராமசாமி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இளங்கோ, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தங்க சித்ரா, உக்கரம் வட்டார மருத்துவ அலுவலர் மரு. பிரபாவதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, துவக்கி வைத்தனர்.அதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவி ஜானகிராமசாமி ,ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.சி.பி. இளங்கோ ஆகியோர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு, அஙகன்வாடி பணியாளர்கள் ஊட்டச் சத்து குறித்து அமைத்திருந்த .
அரங்கை பார்வையிட்டனர்.இந்த மருத்துவ முகாமில் பொது நல மருத் துவம் ,குழந்தைகள் நல மருத் துவம், மகப்பேறு நல மருத்துவம்,, எலும்பு சகிச்சை மருத்துவம், அறுவை சிகிச் சை மருத்துவம்,தோல் மருத்துவம், கண் மருத்துவம், ,காது, மூக்கு ,தொண்டை மருத்துவம் ,மனநல மருத்துவம் என 12 பிரிவுகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள், முகாமில் பங்கேற்ற 2053 நபர் களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு, அதில் 92 நோய் கண்டறியப்பட்ட நபர்களுக்கு, உடன் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்த னர்.முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக,மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாம் துவக்க விழா வில், சத்தியமங்கலம் வட்டாச்சியர் சங்கர்கணேஷ், நகராட்சி பொறியா ளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் கள் அப்துல் வகாப், பிரேம்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், மருத்துவர் கே.ஜி ரங்கநாதன், நடமாடும் மருத்துவ குழுவினர், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணி யாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட 2500-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற் பாடுகளை துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்சோமசுந்தரம் அறிவுரையின் பேரில், உக்கரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் மற்றும் சத்தி நகராட்சி சுகாதாரத்துறையினர் செய்திருந்த னர். நிறைவாக சுகாதார ஆய்வாளர் ரகு நன்றி கூறினார். முகாமில் மருத் துவம் சார்ந்த பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.