அனுப்புனர்.
ஆவடி ஸ்டாலின்.
தமிழ் நாடு இந்து சேவா சங் நிறுவனத்தலைவர்.
எண் 97. இரண்டாவது தெரு.
கலைஞர் நகர்.
பாண்டேஸ்வரம்.
சென்னை.55.
8015701312/9498498644.
பெறுநர்.
மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி அவர்களுக்கு.
விளவன் கோடு சட்டமன்ற தொகுதி.
கன்னியாகுமரி மாவட்டம்.
பொருள்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவன்கோடு தொகுதிக்குட்பட்ட செம்மன்காலை பகுதியில் அமைந்திருக்கும் (கால்வாய்)சானல் மற்றும் குளங்கள் சுத்தம் செய்து தூர் வாரும் பணி செய்ய வேண்டி மனு.
வணக்கம்.
நான் தற்போது மேல் கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி அயக்கோட்டுவிளையகும் தமிழ்நாடு இந்து சேவா சங் அமைப்பின் நிறுவனத் தலைவராக உள்ளேன். இந்த அமைப்பின் மூலம் ஒரு சில சமூக சேவைகளை செய்து வருகிறேன். இதைத்தொடர்ந்து நமது கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள (கால்வாய்) சானல் மிகவும் புல்புதர்கள் நிறைந்தும். கடைகளில் உள்ள கழிவுகள் உள்ளே கொட்டியும் அதன் கரைப்பகுதி இடிந்து விழுந்தும் நீரோட்டம்இல்லாத நிலையில் உள்ளது அதை சார்ந்த நெல்லிகுளம் சீவாண்டி குளம் நீர் வராமல் அதன் உள்ளே மண் நிறைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது நெல்லிக்குளம் கரையில் உள்ள குடிநீர் கிணற்று தண்ணீர் மிகவும் மாசடைந்து பயன்படுத்த முடியாமல் உள்ளது. இந்த குளத்தை நம்பி அப்பகுதி விவசாய மக்கள் உள்ளனர். இந்த குளத்தில் குளிக்க ,விவசாயத்திற்கு தண்ணீர் சேர்த்து வைக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த (கால்வாய்) சானல் மற்றும் குளங்கள் உள்ளாட்சி அமைப்புகள் பராமரிக்காததால் இன்னும் சிறிது காலம் சென்றால் இப்படிப்பட்ட குளங்கள் இருந்ததற்கான அடையாளம் இல்லாமல் போய்விடும் ஆகையால் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உடனடியாக இந்த ( கால்வாய்) சானலையும் குளத்தையும் பார்வையிட்டு தக்க நடவடிக்கை எடுத்து சீரமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் சார்பிலும், தமிழ்நாடு இந்து சேவா சங் அமைப்பின் சார்பிலும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
1. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு.
முதலமைச்சர் தனிப்பிரிவு.
தலைமைச் செயலகம்.
சென்னை.
2. மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு.
நீர்வளத்துறை அலுவலகம்.
தலைமைச் செயலகம்.
சென்னை.
3. மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களுக்கு.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி.
கன்னியாகுமரி மாவட்டம்.
4. உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
கன்னியாகுமரி மாவட்டம்.