மயானத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டிய ஊராட்சி நிர்வாகம்...வெகுண்டெழுந்து மறியலில் இறங்கிய பொம்மநாயக்கன்பாளையம் பொதுமக்கள்

 கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒத்தகுதிரையில் மயானத்தில் கொட்டிய பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த கோரி பொம்மநாய்க்கன்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஈரோடு –சத்தி சாலையில் இருபுறமும் முற்செடிகளை வைத்து பொதுமக்கள் போராட்டம்.

போராட்டம் காரணமாக ஈரோடு - சக்தி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒத்தகுதிரை பகுதியில் சாணார்பாளையம் மற்றும் ஒத்தக்குதிரை பகுதியைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்தமான மயானம் உள்ளது.

இந்த மயானத்தில் வெள்ளிக்கிழமை பொம்மனநாயக்கன்பாளையம் ஊராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியுள்ளது

மயானத்தில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து தகவல் அறிந்து வந்த ஒத்தகுதிரை மற்றும் சாணார்பாளையம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மயானத்தில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என ஈரோடு - சக்தி சாலையில் இருபுறமும் முற்செடிகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

இது தகவல் அறிந்து வந்த கோபி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்

பேச்சுவார்த்தையில் பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி சார்பில் கொட்டப்பட்ட குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்துவதாக ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை தெரிவித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

போராட்டம் காரணமாக ஈரோடு - சக்தி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது



'

Previous Post Next Post