ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் கொம்பனை புதூர் கொளத்துப்பாளையத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டு ஆண்டு ஆட்சி சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கொடுமுடி வடக்கு ஒன்றிய செயலாளர் மு. சின்னச்சாமி தலைமை வகித்தார்.
கொடுமுடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ். சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக
தலைமைக் கழக பேச்சாளர் திருமதி சத்தியவதி சிவக்குமார் கலந்துகொண்டு உரையாற்றினார். கூட்டத்திற்கு கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
ஒன்றிய மாவட்ட பிரதிநிதி எம். நடராஜன் நன்றியுரை நிகழ்த்தினார்.
தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக பூபாலன்...........