2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொது சபையில் இந்திய அரசால் முன்மொழியப்பட்டு தொடங்கப்பட்ட உலக யோகா தினம் 2015 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது யோகா இந்தியாவில் உருவான யோகா உடல்,ஆரோக்கியம், மனஅமைதி, மற்றும் நீண்ட ஆயுளுக்கான தியான பயிற்சி இந்த யோகா தினத்தை முன்னிட்டு சூலூர் பேரூராட்சி வளாகத்தில் துப்புரவு பணியாளர்கள் யோகா செய்தனர். யோகாவின் நன்மைகள் குறித்த செய்தியினை பணியாளர்களுக்கு எடுத்துக்கூறி யோகாவினை சூலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் த. மன்னவன் செய்து காண்பித்தார் உடன் பேரூராட்சியின் தலைவர் தேவி மன்னவன் மற்றும் பேரூராட்சியின் உறுப்பினர் சூ.பே.கருணாநிதி இணைந்து துப்புரவு பணியாளர் உடன் யோகா செய்தனர்