தேசிய அளவிலான ரேங்க் பட்டியல்... தட்டி தூக்கிய சென்னை, கோவை, வேலூர் கல்லூரிகள்

மத்திய கல்வி அமைச்சகத்தின் என்.ஐ.ஆர்.எப்.,(National Institutional Ranking Framework) அமைப்பானது 2023 இல் தேசிய அளவில் சிறந்த கல்லூரிகள் விபரங்களை  வெளியிட்டு உள்ளது. இந்த அமைப்பானது பல்கலைகழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கலைக்கல்லூரிகள் என பிரிவு வாரியாக கல்லூரிகளை தரவரிசை அளிக்கிறது. கல்வித்தரம், குறிப்பிட்ட கல்லூரிகளில் கற்றவர்களின் வேலைவாய்ப்பு பெறும் விகிதம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசைப்பட்டியலானது இடம்பெற்று உள்ளது.

இதில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் தேசிய அளவில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளன. குறிப்பாக வேலூர் சி.எம்.சி., கல்லூரி, சென்னை பிரசிடென்சி கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லூரிகள் முக்கிய ரேங்க் பெற்று தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று உள்ளனர். 
குறிப்பாக தேசிய அளவில் சிறந்த மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் வேலூர் சி.எம்.சி., கல்லூரி மூன்றாம் இடத்தையும், பாண்டிச்சேரி ஜிப்மர் கல்லூரி ஐந்தாம் இடத்தையும் பிடித்து உள்ளது.  கோவை அமிர்த வித்யாலயா கல்லூரி ஆறாம் இடத்தை பெற்று இருக்கிறது. மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் 11 வது இடத்தை பிடித்து இருக்கிறது. இந்த பட்டியலில் முதலிடத்தில் டெல்லி எய்ம்ஸ் உள்ளது.
சிறந்த சட்டக்கல்லூரிகளில் சென்னை சவிதா இன்ஸ்டிட்யூசன் 11 வது இடத்தை பெற்று இருக்கிறது. 
சிறந்த கல்லூரி என்ற பிரிவில் சென்னை பிரசிடென்சி கல்லூரி 3 வது இடத்தையும், கோவை பிரசிடென்சி கல்லூரி 4 வது இடத்தையும் பிடித்து இருக்கிறது. சென்னை லயோலா கல்லூரி 7வது இடத்தை பிடித்து உள்ளது. 
பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரை சென்னை ஐ.ஐ.டி., முதலிடத்தை பெற்று இருக்கிறது. திருச்சி என்.ஐ.டி., 9 வது இடத்தை பிடித்து உள்ளது. வேலூர் வி.ஐ.டி., 11 வது இடத்தை பிடித்து இருக்கிறது. 13 வது இடத்தை அண்ணா பல்கலை பெற்று இருக்கிறது. கோவை அமிர்த வித்யாலயம் இந்த பட்டியலில் 19 வது இடம் பெற்று உள்ளது. 
ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐ.ஐ.டி., இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தது கோவை அமிர்த விஸ்வ வித்யாபீடம் தான் 15 வது இடத்தை பெற்று உள்ளது. 
தேசிய அளவில் பல்வேறு பிரிவுகளில் கல்லூரிகள் ரேங்க் பெற்றது தமிழக மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
இது தவிர பல்வேறு ரேங்க் பெற்ற கல்லூரிகளின் விபரங்களை மத்திய கல்வி அமைச்சகத்தின் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. கீழ்க்கண்ட லிங்க் மூலம் அவற்றை பார்க்கலாம். https://www.nirfindia.org/2023/Ranking.html




Previous Post Next Post