சூலூர் கிழக்குமண்டல் மற்றும் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சூலூர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர் இதில் சூலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருநங்கைகளின் பாலியல் தொந்தரவு மற்றும் முறைகேடாக பணம் மிரட்டி வசூலிப்பது தொடர்பாக புகார் மனுவை அளித்தனர் மனுவில் சூலூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட சிந்தாமணிபுதூர் சிக்னல் மற்றும் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ஜிஎஸ்என் திருமணமண்டம் முன்பு காங்கேயம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய ஆர்டிஓ அலுவலகம் எதிரிலும் மற்றும் காடாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஏர்போர்ஸ் பகுதிகளிலும் திருநங்கைகள் கடைகளிலும் காரில் செல்வோரிடம் மிரட்டி பணம் பறிப்பதும் பாலியல் தொந்தரவு அளிப்பது போன்ற அடாவடி செயல்களை வாடிக்கையாக கொண்டுள்ளனர் இதனால் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் மேலும் இது போன்ற ஒழுக்ககேடான இச்செயலால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு அவப்பெயரும் கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கின்றது எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் சார்பில் கேட்டு கொள்கிறேன் என்றா சூலூர் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் சூலூர் காவல்நிலையத்தில் மனு அளித்தார் உடன் சூலூர் நகர பாஜக பொறுப்பாளர் அசோக் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்