சூலூர் மைக்கேல் ஜோப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14.6.2023 அன்று காலை 10.30 மணியளவில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவியர்களை வரவேற்கும் விழா நடத்தப்பட்டது இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது கணிதத் துறை தலைவர் திருமதி. மோகனப்பிரியா வரவேற்புரை நிகழ்த்தினார் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பெண்கள் முன்னேற்றத்திற்கான குடியரசுத் தலைவர் விருது பெற்ற திருமதி. லதா சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டார்
இதனைத் தொடர்ந்து மைக்கேல் ஜோப் நினைவு மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரவி அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தையும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதையும் பற்றி எடுத்துரைத்தார் சிறப்பு விருந்தினர் கல்வியின் முன்னேற்றம் மற்றும் மாணவியர்களின் கனவு நிறைவுபெற எவ்வாறான செயல்களில் ஈடுபாடு கொண்டு கல்லூரி சாதனையாளர்களாக வரவேண்டும் என்றும் பல முற்போக்கு வழிமுறைகளை மாணவியர்களுக்கு எடுத்துக் கூறினார் கல்லூரி முதல்வர் முனைவர் செ.ஷாலினி பாக்கியம் கமலா அவர்கள் பேசுகையில் பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும் மாணவியர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவு செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார் மைக்கேல் ஜோப் மெட்ரிக் மெட்ரிக் பள்ளி முதல்வர் திருமதி.சாந்தி அவர்கள் மாணவியர்களுக்கு மன தைரியத்தையும் சுயமரியாதையையும் எடுத்துக்கூறி வாழ்த்துகளையும் வழங்கினார் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வணிகவியல் துறைத் தலைவருமான திருமதி எஸ்.ஆர். தனலட்சுமி அவர்கள் மாணவியர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்
கல்லூரியில் இருக்கும் அந்தந்த துறைத் தலைவர்கள் தங்களுடைய துறைகளின் முக்கியத்துவத்தையும் சாதனைகளையும் எடுத்துரைத்தார்கள் மைக்கேல் ஜோப் கல்லூரியின் நிதி குழுத் தலைவர் திரு.குருவிலா வர்க்கிஸ் அவர்கள் மாணவியர்களுக்கு எவ்விதமான உதவிகள் தேவை என்றாலும் உதவுவதாகக் கூறினார் சபீனா விடுதியின் நிறுவனத் தலைவர் கல்லூரியின் சுற்றுச்சூழலைப் பற்றி எடுத்துக் கூறி மாணவியர்களுக்கு வாழ்த்துகளை கூறினார் கல்லூரியின் துணை முதல்வர் திருமதி எஸ்.ஆர்.தனலட்சுமி அவர்கள் நன்றியுரை வழங்கினார் விழாவில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் இவ்விழாவானது நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.