கிருஷ்ணகிரி மாவட்டம் புலியாண்டி பட்டி ( ஊத்தங்கரை)பகுதியைச் சார்ந்த 9- நபர்கள்( 5-பெண்கள்3-ஆண்கள் -7 -வயது குழந்தை ஆண் ) உட்பட குறவன் பட்டியலினம் சார்ந்த நபர்களை பொய் வழக்கில் ஆந்திரா மாநிலம் சித்தூர் நகர காவல்துறை சட்ட விரோதமாக பிடித்து சென்று சித்தூர் காவல் நிலைய எல்லையில் வைத்து பெண்களை வன்புணர்வு செய்தும் , சித்திரவதை செய்தும், பெண்ணின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவியும், இரும்பு கம்பியால் குத்தியும், மிகவும் கொடூரமாக தாக்கிய ஆந்திரா மாநில காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு குறவன் மலைக்குறவன் மற்றும் கொறவர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழுஒருங்கிணைப்பாளர் சேலம் கொ. செல்வராஜ் அய்யா தலைமையில் ஈரோடு காளை மாட்டு சிலை நீலகிரிஸ் எதிரில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு தலைவர் குறிஞ்சிப. சந்திரசேகரன்வரவேற்பு உரையாற்றினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள்...
1.தமிழக அரசே!!! தமிழக அரசே!!! பாதிக்கப்பட்ட 7- நபர்களுக்கு உடனடியாக ரூ. 25 - லட்சம் ரூபாய் நிவாரணமாக உடனடியாக வழங்கிட வழங்கிடு
2.அத்து மீறி நடந்த சித்தூர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது வழக்கு பதிவு வேண்டும்
3.தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்,தேசிய மகளிர் ஆணையம்,தேசிய குழந்தைகள் பாதுகாப்பு நல உரிமை ஆணையம் அதிகாரிகள் தலையிட்டு கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.குறவன் சமூகத்தின் பல்வேறு குழுப் பெயர்களை சீர் மரபினர் பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டும்.
( அம்பாசங்கர் ஆணையம் பரிந்துரை செய்தது)
குறவன் சமுதாய மக்களின் 40- ஆண்டு கால கோரிக்கையான குறவன் SC -பட்டியலில் இருந்து பழங்குடியினர் (ST) பட்டியலுக்கு மாற்றிட வேண்டும்.
5.குறவன் சமுதாய இனத்தை மேம்படுத்தும் வகையில் குறவன் நல வாரியம் அமைத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ...
கண்டன உரையாற்றியவர்கள்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் பாட்டாளி மக்கள் கட்சி ஈரோடு மாவட்ட துணைத் தலைவர் நா.முருகேசன்,வீர நம்பி குறிஞ்சி பேரவைமாநில தலைவர் சிவகுமார் ,காவல்கார குறிஞ்சியர் பொதுநல சங்கம் நிறுவனர் பாலசுப்பிரமணியம் ,குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் சந்திரன் ,பகுஜன் சமாஜ் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் தேவராஜ்,ஜனநாயக எழுச்சி பேரவைமாநில தலைவர் சிலம்பரசன்,ஜனநாயக மக்கள் கழக நிறுவன தலைவர் கண்ணன் ,பாரதிய ஜனதா கட்சி ஈரோடு தெற்கு மாவட்ட பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்திவேல் பாரதிய ஜனதா கட்சி ஈரோடு தெற்கு மாவட்ட பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சாய்வத்ஷன் ,குறிஞ்சி பொது தொழிலாளர் நல சங்க பொதுச் செயலாளர் சரவணகுமார் , திருத்தணி குறவர் சங்க தலைவர் முரளி ,பழங்குடிகள் சமூக நீதிக் கட்சி நிறுவன தலைவர் கார்த்திகேயன் ,தமிழ் புலி கட்சியின் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் ,தேசிய குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவைமாநில துணைத் தலைவர் ஜெபாஸ்டின் ,மதுரை மன்னன் மணிக்குறவர் அறக்கட்டளை தலைவர் அலங்கை பொன் ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர்கள்
தமிழ்நாடு முழுவதும் இருந்து 25-க்கும் மேற்பட்ட சங்க தலைவர்கள் நிர்வாகிகள் பெண்கள் பொதுமக்கள் என 200 -க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.