கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சப்டிவிசன், சூலூர் மகளிர் காவல்நிலையத்தை பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோகால் மூலம் திறந்து வைத்தார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உடனிருந்தார் துவக்க விழாவில் ஜ.ஜி சங்கர், மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் டி.ஐ.ஜி விஜயகுமார், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தையல்நாயகி சூலூர் காவல்நிலைய ஆய்வாளர் மாதைய்யன் மற்றும் சூலூர் மகளிர் காவல்நிலைய முதல் ஆய்வாளர் ஏ.சுமதி மற்றும் பழனியம்மாள்,கலைவாணி ,அனுசுயா,ஆனந்தி,இந்துபிரியா,சுவாதி,பிரியா உள்பட அனைவரும் பொறுப்பேற்று கொண்டனர்.