திருப்பூரில் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா!!திருத்தேரில் பூமிநீளாதேவி,கனகவல்லி தாயாருடன் அருள்மிகு வீரராக பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி முத்தங்கிராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிதந்தார்!!ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளக்க திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம்!!!
திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் திருக்கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது, ஸ்ரீரங்கத்தில் இருந்து சீர்பாதம் தாங்கி நடையழகுடன் ஸ்ரீதேவி பூமிதேவி தாயார்களுடன் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கருட சேவை சாதித்து அருள்பாலித்தார்.
தொடர்ந்து இன்று வீரராகவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன தொடர்ந்து கருடாழ்வார்,தீபம், பலிபீடம் ஆகியவைகள் இடம்பெற்ற கொடியுடன் உள்ள திருத்தேரில் பூமிநீளாதேவி,கனகவல்லி தாயாருடன் அருள்மிகு வீரராக பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி முத்தங்கிராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிதந்தார்.
திருத்தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளக்க வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்,முன்னதாக மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ வீரராகவ பெருமாளுக்கு சீர் வரிசைகளுடன் வந்து சிறப்பு செய்தனர்.தொடர்ந்து ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் தேரின் முன்புறம் பக்தர்கள் கும்மியாட்டம், கோலாட்டம், சலங்கை ஆட்டம், காவடிஆட்டம்,உள்ளிட்டவைகள் உடன் திருத்தேர் பவனி வந்தது,வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திருத்தேர் ஓட்டத்தைக் கண்டு களித்தனர்.திருத்தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தேர்த்திடலை அடைந்தது.