கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி க. பரமத்தியில் பாஜக வின் ஒன்பது (9) ஆண்டுகால மாபெரும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆணைக்கிணங்க நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பாஜக கரூர் மாவட்ட தலைவர் V.V. செந்தில்நாதன் தலைமை வகித்தார்.
வரவேற்பு உரை க. பரமத்தி வடக்கு ஒன்றிய தலைவர் செல்வி பழனிச்சாமி முன்னிலையில் நடைபெற்றது.
க. பரமத்தி பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற மாபெரும் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில பொதுச் செயலாளர் தனி இயக்குனர் NABARD வங்கி, பேராசிரியர்இராம.ஸ்ரீனிவாசன், மாநில துணைத்தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், K. P. இராமலிங்கம், கரூர் மாவட்ட பார்வையாளர் S. A. சிவசுப்பிரமணியம் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்.
மேலும் இக்கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட அணி பிரிவு தலைவர்கள், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இச்சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் நன்றியுறையை க. பரமத்தி தெற்கு ஒன்றிய தலைவர் P. தங்கவேல் நிகழ்த்தினார்.
தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக க. பரமத்தியில் இருந்து சின்ன தாராபுரம் குழந்தைசாமி........