டெல்லி கிளம்பினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி...4 நாட்கள் பயணம்

 தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி 4 நான்கு நாட்கள் பயணமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி திடீரென நான்கு நாட்கள் பயணமாக சென்னையில் இருந்து விமான மூலம் டெல்லி புறப்பட்டு சென்று உள்ளார்.டெல்லியில் இருந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அவசர அழைப்பு வந்ததன் அடிப்படையில் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆளுநர் உடன் அவரின் செயலாளர், உதவியாளர்,பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர்.

மேலும் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடருவதை ரத்து செய்ய வேண்டும் என அதிமுகவினர் புகார் அளித்ததன் அடிப்படையில் அது குறித்து ஆலோசனை மேற்கொள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு உருவாகி வரும் நிலையில் டெல்லி சென்றுள்ள ஆளுநர் பிரதமர், குடியரசு தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை இந்த நிலையில் நான்கு நாட்கள் பயணமாக ஆளுநர் திடீரென டெல்லி சென்று இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

Previous Post Next Post