ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்ட மன்ற தொகுதி. பெரிய கள்ளிப்பட்டி, பனையம்பள்ளி ஊராட்சி பகுதி களில், 46 இலட்சம் மதிப்பில் ஆன, வளர்ச்சி பணிகளுக்கான பூமி பூஜை பவானிசாகர் எம்.எல்.ஏ அ.பண்ணாரி தலைமையில் நடைபெற்றது.2022 - 2023 ஆம் ஆண்டுக்கான, பவானி சாகர் சட்டமன்ற தொகுதி, மேம்பாடு வளர்ச்சி நிதியிலிருந்து, பவானி சாகர் ஊராட்சி ஒன்றியம், பெரிய கள்ளிப்பட்டி ஊராட்சி பெரிய கள்ளிப் பட்டி காலனி முதல் கருப்பராயன் கோயில் வரை கான்கிரீட் தடுப்பு சுவர் சுமார் ரூபாய் 22 லட்சம் மதிப் பீட்டிலும், பெரிய கள்ளிப்பட்டி மெயின் ரோடு முதல் டீக்கடை வரை, ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டிலும், பனையம்பள்ளி ஊராட்சி, அம்மா நகர் பகுதியில், தார்சாலை சுமார் ரூபாய் 18.14 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள,பூமி பூஜை செய்து, கட்டுமான பணி யினை,பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளரு மான,அ.பண்ணாரி,பி.ஏ.எம்.எல்.ஏ.தலைமை தாங்கி. துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்,பெரியகள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் துரை, அதிமுக பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர், வி.ஏ..பழனிச் சாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப் பினர் தங்கராஜ்,பனையம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நாகேந்தி ரன், துணை தலைவர் துரைசாமி, தாசம்பாளையம் மணி,நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி(எ) ரங்கசாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் சோமசுந்தரம், பெரிய கள்ளிப்பட்டி ஊராட்சி மன்றத் துணை தலைவர் தேவராஜ், மாவட்ட பாசறை இணை செயலாளர் கணேசன், வழக்கறிஞர் வெற்றிவேல், கிளை செயலாளர்கள் அப்பாச்சி, பழனிச்சாமி,வேலுச்சாமி, தர்மன, மகாலிங்கம்,பழனி, சரவணன் , பிரசாந்த், தேவராஜ், மாகாளி, சிவாஜி, சுப்பிரமணியம், பூஜித் ,காமேஷ் மற்றும் அதிமுக கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.