பவானிசாகர் அணை மீன்பிடி தொழிலாளர்கள் மீன் குத்தகை யை, மீனவர் சங்கத்திற்கு வழங்க கோரி கடந்த திங்கள்கிழமை முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் அடுத்த பவானி சாகர் அணை மீன்பிடி தொழிலில், சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக 1500 மேற்பட்ட குடும்பத் தினர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்ற னர். கடந்த 20 ஆண்டு களுக்கு முன்பு, பவானிசாகர் அணை யில் மீன்பிடி குத்தகையை, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப் படையில் விடப்பட்டது. இதனால் மீனவர்கள் தனியாரிடம். தினக் கூலி அடிப்படையில், பணியாற்றி வந்தனர். இதுகுறித்து மீனவர்கள் சங்கம் சார்பில், மீன்பிடி குத்தகை யை, தங்களுக்கு வழங்க கோரி,
கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால்,இது வரை பவானிசாகர் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் சங்கத்திற்கு குத்தகை வழங்கப் படாமல், தனி நபர் நிறுவ னத்திற்கு ஒப்பந்த அடிப்படை யில் குத்தகை விட்டனர். இதனால் பவானிசாகர் மற்றும் சிறுமுகை பகுதியில் மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தினர் பவானி சாகர் அணை மீன்பிடி தொழிலாளர்கள் மீன் வளத் துறை அதிகாரியிடம் முறை யிட்டும், அதிகாரிகள் இந்த ஆண்டுக்கான குத்தகையை, மீண்டும் தனி நபருக்கே மேலும் 2 மாத காலத்திற்கு நீட்டித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவானிசாகர் மற்றும் சிறுமுகை மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தினர் சுமார் 1500க்கு மேற்பட்டோர் திங்கள் முதல் மீன் பிடி தொழிலில் ஈடுபட போவ தில்லை என காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் .இதனால் பவானி சாகர் மீன் விற் பனை நிலையம் வெறிச் சோடி காணப்பட்டுள்ளது. மீனவர் கள் கடந்த 4 நாட்களாக,மீன்பிடி தொழிலில் ஈடுபடாததால் மீன்கள் தட்டுப் பாடு ஏற்பட்டு வெளி மாநில மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள், அதிக விலை கொடு த்து, மீன்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் என, மீனவர்கள அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.