ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள் 211 தன்னார்வல தொண்டு நிறுவனமானது கடந்த 13 ஆண்டுகளாக சமூகத்திற்கு தங்களின் பங்களிப்பை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது சுமார் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டத்தில் கீழ்கண்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பொது இடங்களில் மரங்கள் நடுதல், பாதுகாத்தல் போன்ற சமூக நல நற்பணிகளை செய்துள்ளது.
அவைகள்:
1. சிவகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள்.
2. கணபதி பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பிளட் செல் கவுண்டர் மற்றும் இ.சி.ஜி மெஷின் வழங்கியது.
3. சாமிநாதபுரம் புதூர் அரசு பள்ளிக்கு 6 கணினிகள்.
4. கருந்தேவன்பாளையம் அரசு பள்ளிக்கு 6 கணினிகள்.
5. மொடக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு ஏற்படுத்தி கொடுத்தது.
6. பெருந்துறை ஐ. ஆர். டி. டி மெடிக்கல் காலேஜ் வளாகத்தில் 2100 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
7. முகாசி பிடாரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடம் பராமரிப்பு மற்றும் மாணவர்களுக்கு இருக்கைகள் வழங்கியது.
8. சென்னிமலை கோவில் நிலத்தில் ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் அவர்களுடன் இணைந்து 15000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
9. மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டயத்தெர்மி யூனிட், ஆப்ரேஷன் தியேட்டருக்கு தேவையான லைட் மற்றும் டேபிள், சோலார் வாட்டர் ஹீட்டர், வாஷிங் மெஷின் ஆகியவை வழங்கியது.
10. அவல்பூந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கழிப்பறை வசதிகள் மேம்படுத்துதல் மற்றும் வாட்டர் ஹீட்டர் வழங்கியது.
11. சிவகிரி ரத்தினபுரி அரசு பள்ளிக்கு 5 கணினிகள்.
12. எழுமாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவ அறை விரிவாக்கம்.
மேற்கண்ட இடங்களில் வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் இதர பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்வானது இன்று 22.06.2023 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் அந்தந்த இடங்களில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டு டேபிள் 211 சேர்மன் திரு. சிவ்குமார் சின்னசாமி அவர்கள் தலைமை ஏற்க சிறப்பு அழைப்பாளர்களாக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள், LMF.Tr. இளங்கவி (கோ கிரீன் கன்வினர், ஏரியா 7), LMF TR. ரகுலன் சேகர் ( ஏரியா செகரட்டரி, ஏரியா 7) மற்றும் ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் உறுப்பினர்களான அரவிந்த், கில்காமேஷ், செல்வகுமார், பிரதீப், அருன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வில் அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி. கிருத்திகா சிவ்குமார் மற்றும் அந்தந்த பகுதியின் உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.