ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் அருகே அமைந்துள்ளது அருள்மிகு பாலதண்டாயுதபாணிதிருக்கோயில் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருமண தடையை நீக்கும் சுயம்வர பார்வதி யாக பூஜை நடக்கும் இதில் திருமணம் ஆகாத ஆண்கள் பெண் கள் என கலந்து கொள்வார்கள். இந்த ஆலயத்தில் 27 ஆம் ஆண்டு திருவிழா மற்றும் திருமண தடையை நீக்கும் சுயம்வர பார்வதி யாகம் இன்று 9ம் தேதி நடைபெற்றது.இதில் ஈரோடு ,கோவை, திருப்பூர், சேலம், உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருமணம் ஆகாத ஆண்கள் பெண்கள் என வந்திருந்தனர்.
இதில் திருமணம் ஆகாத அனைவ ருக்கும் முதலில் விநாயகர் பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாலதண்டாயுதபாணி கோவில் முரு கன் வழிபாடு நடைபெற்றது அதனை தொடர்ந்து காலபைரவர் கோயிலு க்கு சென்று சனி பகவானின் தாக்கம் நீங்கிட வழிபாடு செய்தும், நவக்கிரக ஆலயம் சென்று வணங்கி விட்டு, அதன் அருகே உள்ள அக்னி குண்டத் திற்குசென்று, அனைவரும் நவதானி யம் எடுத்து, தங்கள் தலையை சுற்றி அக்னி குண்டத்தில் போட்டு நவகிரக தோஷம் நிவர்த்தி செய்தனர்., ஆண்கள் வாழை மரத்துக்கு மாலை அணி வித்து களத்திர தோஷம் நிவர்த்தி செய்தலும் ,பெண்கள் பாலை மரத் துக்கு மாலை அணிவித்து மாங்கல்ய தோஷம் நிவர்த்தி செய்தனர். பின் னர் ஆலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த, கருந்துளசி தொட்டாச் சிணு ங்கி மூலிகை செடிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வணங்கி, ராகு கேது தோஷம் உள்ள வர்களுக்கு தோஷ நிவர்த்தி செய்தனர்.
அதனை தொடர்ந்து பரம்பரை பழி பாவங்கள் பிரம்மஹத்தி சிவசுகர்த்தி தோஷ நிவர்த்தி வேண்டி, ஏகாத மூர் த்தி ஆலயம் முன்பு அக்னிகுண்டம் தாண்டி, பச்சை பந்தலில் புகுந்து ஏகபாத மூர்த்தி வணங்கி விட்டு, சிறப்பு வாசல் வழியே திருக்கல்யா ண மற்றும் தோஷ நிவர்த்தி யாக சாலைக்கு வந்தமர்ந்தனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த யாக சாலை யில் 12:30 மணியளவில் மகா பூர்ணா குதி பூஜையும், 1 மணியளவில் பார் வதி பரமேஸ்வரன் திருக்கல்யாணம் நடைபெற்றது.இதில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட திரு மணம் ஆகாத ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்து கொண்டனர்.