தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 57 சதவீத மின் கட்டணம் உயர்ந்துள்ளது.... பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

 தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 57 சதவீத மின் கட்டணம் உயர்ந்துள்ளது என்று பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்


திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக, நெரிப்பெரிச்சல் பகுதி கழகம், பாண்டியன் நகர் பகுதியில் நடைபெற்ற தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும் கழக தேர்தல் பிரிவு செயலாளருமான முனைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய கழக செயலாளருமான கே என் விஜயகுமார் எம்எல்ஏ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். 
இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது கூறியதாவது:
பொள்ளாச்சி வி.ஜெயராமன்
திருப்பூர்: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே அதிமுக கூட்டணி அமைக்கப்படும் என்று திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் பாண்டியன் நகரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமைத் தொடக்கிவைத்த பின்னர் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:திமுகவில் எத்தனையோ மூத்த தலைவர்கள் காலம் காலமாக தியாகம் செய்து வந்தபோதும் அவர்களை எல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு தனது கட்சியின் முக்கியத் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். இதன் விளைவு தற்போது தமிழகம் குட்டிச்சுவராகியுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுவரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் ஆகியவை மக்களின் தலையில் மிகப்பெரிய பாரமாகும். இதைப்பற்றி எல்லாம் மு.க.ஸ்டாலினோ, உதயநிதியோ மற்ற திமுகவினரோ சிந்திக்கவில்லை. தற்போது இவர்களின் ஒரே சிந்தனை செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். ஏனெனில் ரூ.36 ஆயிரம் கோடி டாஸ்மாக், வரிகட்டாத பார் மூலமாகவும், மின்சாரத்துறை மூலமாகவும் முதல்வர் குடும்பத்துக்கு சென்று கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். செந்தில்பாலாஜி எதையாவது சொல்லி விட்டால் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பு வந்துவிடும் என்ற முதல்வர் பதற்றமாக உள்ளார். நிச்சயமாக ஏழை மக்களுக்கு பல்வேறு துன்பங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சி அவர்களின் கண்ணீரில் கரைந்துவிடும். டாஸ்மாக் பாரில் குவார்ட்டர் ஒன்றுக்கு ரூ.10 வாங்குவது மூலமாக மாதம் ரூ.300 கோடி செந்தில்பாலாஜி மூலமாக முதல்வர் குடும்பத்துக்கு செல்கிறது. உரிமம் வழங்கப்படாத 3,500 பார்கள் மூலமாக 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்யப்படுவதன் மூலமாகவும் ஆயிரக்கணக்கான கோடி செல்கிறது. போலி மது விற்பனை மூலமாக திருச்சியில் 2 பேர், தஞ்சாவூரில் 2 பேர் என மக்கள் இறந்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணை மூட்டும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், கஞ்சா, அபின் போன்றபோதைப் பொருள்களின் கூடாரமாக திமுக அரசு மாற்றி வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 57 சதவீத மின் கட்டணம் உயர்ந்துள்ளது. கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய இறப்பின்போது வாய் திறக்காக திமுக கூட்டணிக்கட்சிகள் செந்தில்பாலாஜி கைதுக்காக சினம் கொண்டு எழுகின்றனர். இதுதான் திமுக தோழமைக்கட்சிகளின் நிலையாகும். ஆகவே, விரைவில் இதற்கு எல்லாம் முடிவு கட்ட மக்கள் எழுச்சி ஏற்படும் என்றார். இதைத்தொடர்ந்து, அவர் பேசுகையில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே அதிமுக கூட்டணி அமைக்கும் என்றார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் 
பூலுவபட்டி பாலு மற்றும் நெரிப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர் பட்டுலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். வட்டக் கழக செயலாளர் கணேசன் உரை வாசித்தார். இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள், பகுதி கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் இம்மானுவேல், ரேவதி முத்துக்குமார், கலா கார்த்திக், பகுதி கழக துணை செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோருடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post