18 வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகளே-அரசமைப்பு உரிமைக் கல்வி மன்றம் கோரிக்கை.



தாளவாடி அருகே உள்ள தலைமல கிராமத்தில், அரசமைப்பு உரிமை கல்வி மன்றத்தின் சார்பில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின  விழிப்புணர்வு பேரணியும்  கூட்டமும் நடைபெற்றது..11 வயது முதல் 15 வயது வரையுள்ள 20 குழந்தைகளை தேர்வு  செய்து, அரசமைப்பு உரிமை கல்வி மன்றம் எனும் அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு அரசியல் அமைப்பு சட்டம் குறித்த கல்வியை வழங்கும் பணியை கடந்த இரண்டு ஆண்டுகளாக வான் முகில் மற்றும் சுடர் அமைப்பு மேற்கொண்டு வரு கிறது.அந்த வகையில் தலை மலை யில், அமைக்கப்பட்ட அரசமைப்பு உரிமை கல்வி மன்றத்தின் சார்பில், குழந்தை தொழிலாளர் முறை எதிர் ப்பு தினத்தை முன்னிட்டு விழிப் புணர்வு பேரணியும், விழிப்புணர்வு கூட்டமும், கதை சொல்லல் நிகழ்வும் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டமும், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டமும் குழந்தை களின் வயது 14 எனக் கூறுகிறது. ஆனால்,குழந்தை திருமண தடைச் சட்டம் குழந்தைகளின் வயதை 18 என வரையறுக்கிறது. இவ்வாறாக ஒவ்வொரு சட்டமும் ஒவ்வொரு வயதை வரையறுக்கும் போது பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே 18 வயதுள்ள அனைவரும் குழந்தை களே என அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என இந்த கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.இந்த கருத்தரங்கில், சுடர் அமைப்பின் இயக்குனர் எஸ்.சி .நடராஜ், கதை சொல்லி கள் சரிதா, ஜோ, கண்ணன், தலை மலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர் கள் துரைசாமி, செந்தில்குமார், அரசமைப்புரிமை கல்வி திட்ட  ஒருங்  கிணைப்பாளர் எஸ்.தேன்மொழி, நெறியாளர் சவிதா ஆகியோர் பங்கேற்றனர்.
Previous Post Next Post