ஈரோடு மாவட்டம் ஜீவானந்தம் சாலையில் உள்ளகள்ளு கடை மேடு பகுதியில் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் சிறப்பு மருத்துவமனை ரூபாய் 10 மருத்துவ சேவை கட்டணம் பெற்று அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற மருத்துவமனை திறக்கப்பட்டது.
மருத்துவமனை திறப்பு விழா ஆற்றல் அசோக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
மருத்துவமனை குறித்து ஆற்றல் அசோக் குமார் பேசும்போது ஆற்றல் அறக்கட்டளையின் தொடர் சமுதாய சேவை வரிசையில் இன்று ஆற்றல் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. சிறந்த மருத்துவ நிபுணர் மற்றும் செவிலியர் பொதுமக்களுக்கு சேவை அளிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிறு, செவ்வாய், வியாழன்,ஆகிய மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் 12 மணி வரை மருத்துவ சேவை அளிக்கப்படும். திங்கள், புதன், சனி, ஆகிய மூன்று நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மருத்துவ சேவை அளிக்கப்படும். இதற்கு ரூபாய் பத்து ரூபாய் மட்டுமே மருத்துவ சேவை கட்டணமாக பெறப்படும் எனவும், தேவைப்படும் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட மருந்துகள் இலவசமாகவும் வழங்கப்படும் என கூறினார்.
இம்மருத்துவமனையின் சிறப்பு அம்சமாக இருமல்,சளி, தொண்டை வலி, தலைவலி, உடல் வலி, முழங்கால் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல்,சிறுநீர் பாதை நோய் தொற்று, ரத்த அழுத்தம்,அல்சர், தோல் பிரச்சனைகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் வலி, அதிக உதிரப்போக்கு, காயம் பராமரிப்பு, உள்ளிட்ட 18 வகையான நோய்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது.
மேலும் நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி கே சரஸ்வதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சௌந்தரம், மற்றும் ஆற்றல் அறக்கட்டளை முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்