திருப்பூர் 15 வேலம்பாளையம் அரசு பள்ளியில் ஏ.சி., வசதியுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு

திருப்பூர் அக்‌ஷயா டிரஸ்ட்,15 வேலம்பாளையம் அறிவு திருக்கோயில் இணைந்து 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஏ.சி., வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவப்பட்டு பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக  திறந்து வைக்கப்பட்டது.

இந்த அதிநவீன தொடுதிரை வகுப்பறைகளை பள்ளி மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்காக, திருப்பூர் எம்.பி., சுப்பராயன்,  திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க. செல்வராஜ், திருப்பூர் மேயர் என் தினேஷ் குமார், திருப்பூர் துணை மேயர்  ரா. பாலசுப்பிரமணியம் , ஆணையாளர்  பவன் குமார் ஜி கிரியப்பனவர் மண்டலக்குழு தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம்,   கவுன்சிலர் செல்வராஜ்,  திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  எம் பாலமுரளி  ஆகியோர்  திறந்து வைத்தனர். இந்த வகுப்பறைகளில் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் தொடுதிரை, ஏ.சி., வசதி, ஸ்மார்ட் ஃபேன், சிசிடிவி கேமரா, லாக்கர்கள் அமைக்கப்பட்டு உள்ளனர். 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அவர்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர்   ஸ்கை  சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். 
Previous Post Next Post