சென்னை விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தை விட, மே மாதம் பயணிகள் எண்ணிக்கை 1,48,031 அதிகரித்துள்ளது. அதைப்போல் விமானங்களின் எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தை விட மே மாதம் கூடுதலாக 303 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பயணிகளின் எண்ணிக்கை 17,42,607. ஆனால் மே மாதம் 18,90,638.
அதைப்போல் ஏப்ரல் மாதம் விமானங்களின் எண்ணிக்கை 11,405. மே மாதம் 11,708.
சென்னை விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்திற்கு முன் எப்படி சென்னை விமான நிலையம் பரபரப்பாக இருந்ததோ அதுப்போல் தற்போது சென்னை விமான நிலையம் மாறி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2023 ஏப்ரல் மாதத்தில் 11 ஆயிரத்தி 405 விமானங்களில், 17 லட்சத்தி 42 ஆயிரத்து 607 பேர் பயணம் செய்து உள்ளனர். இதில் உள்நாட்டு முனையத்தில் 8 ஆயிரத்தி 751 விமானங்களில், 12 லட்சத்தி 97 ஆயிரத்தி 49 பேரும், சர்வதேச முனையத்தில் 2,654 விமானங்களில் 4 லட்சத்தி 45 ஆயிரத்தி 558 பேரும் பயணம் செய்து இருந்தனர்.
ஆனால் 2023 கடந்த மே மாதம் கோடை விடுமுறை காரணமாக விமான சேவைகள் அதிகரித்தன. உள்நாட்டு பயணிகளை பொறுத்தமட்டில் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, அந்தமான், கொச்சி, பெங்களூர், மதுரை, கோவை உள்ளிட்ட விமானங்களிலும் சர்வதேச பயணிகள் இலங்கை, துபாய், அபுதாபி, சவூதி அரேபியா, கத்தார், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், பிரான்ஸ் உள்ளிட்ட விமானங்களில் அதிகமானவர்கள் பயணித்துள்ளனர்.
இந்தப் பயணிகளின் பெரும்பாலானவர் சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில், வர்த்தகம், பணிகளின் நிமித்தம் செல்லும் பயணிகளும் கணிசமாக அதிகரித்து உள்ளனர். மே மாதத்தில் 11, ஆயிரத்தி 708 விமானங்களில், 18 லட்சத்தி 90 ஆயிரத்தி 638 பேர் பயணம் செய்து உள்ளனர். இதில் உள்நாட்டு முனையத்தில் 8 ஆயிரத்தி 907 விமானங்களில் 13 லட்சத்தி 70 ஆயிரத்தி 160 பேரும், சர்வதேச முனையத்தில் 2,801 விமானங்களில் 5 லட்சத்தி 20 ஆயிரத்தி 478 பேரும் பயணம் செய்து உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தை விட, மே மாதம் விமான சேவைகளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன. சென்னை விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மே மாதம், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 31 பயணிகள் அதிகரித்துள்ளனர். அதேபோல் விமானங்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தை விட மே மாதம் 303 விமானங்கள் அதிகமாக இயக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து பல்வேறு நாடுகள் நகரங்களுக்கு இணைப்பு விமானங்கள் அதிக அளவில் உள்ளதால், சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகின்றன.
தென்னிந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக பயணிகள் மற்றும் அதிக விமானங்களுடன் சென்னை விமான நிலையம் முன்னணியில் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சுற்றுலா பயணிகள் பெருமளவு சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.