வக்பு வாரியம் நிர்வாகிகளை அறிவித்த பின்னரே, திருவிழா நடத்த முடிவு- கெஜலட்டி தர்ஹா அமைதிப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு..



ஈரோடுமாவட்டம்,பவானிசாகர்அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகத்தில்ற்கு உட் பட்ட,கெஜலட்டியில்,200 ஆண்டுகளு க்கு மேலாக, பழமை வாய்ந்த தர்ஹா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு, உருஸ் திருவிழா நடை பெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு திரவிழாவின் போது,நிர்வாகிகளில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கரு த்து மோதல் காரணமாக, இந்த ஆண் டு ஒரு தரப்பினர் மட்டும், திருவிழா நடத்த, நோட்டீஸ் அச்சடித்து, விநி யோகித்த நிலையில், மற்றொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவி த்து, மாவட்ட வன அலுவலரிடம் மனு அளித்தனர். இதனையொட்டி,இரு தரப்பினரும் இணைந்து விழா நடத்த அனுமதி பெறவேண்டும் என கூறி, விழா நடத்த, வனத் துறையினர். அனுமதி மறுத்தனர். இதனை யொட்டி, இரு தரப்பினரிடையே, அமைதி பேச்சுவார்த்தை, சத்திய மங்கலம் வனக்கோட்ட புலிகள் காப்பக துணை இயக்குனர் அலு வலகத்தில் நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்டஇருதரப்பினர் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் வெங்கட் பிரபு, சத்தியமங்கலம் காவல் உதவி கண் காணிப்பாளர் அய்மென் ஜமால், சத் தியமங்கலம் வட்டாச்சியர் சங்கர் கணேஷ், பவானிசாகர் வனச்சரகர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் பிர பாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

'

பேச்சுவார்த்தையில்,இருதரப்பினரும்  இணைந்து, வக்பு வாரியத்தால், தேர்தல் நடத்தப்பட்டு, உறுப்பினர்கள் அறிவித்த பின்னரே,சந்தனகூடுதிரு விழா நடத்தப்பட வேண்டும் என கூட் டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டும், மேலும் வக்பு வாரியம் தேர்தல் நடத்தும் வரை, எவ்வித பிரச் சினைகளிலும் ஈடுபட மாட்டோம் என உறுதி அளித்து, இருதரப்பினரும் கையொப்பமிட்டனர்.

Previous Post Next Post