நீலகிரி மாவட்டம் பந்தலூர் கொலப்பள்ளி பாடசாலை வீதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கிணற்றிலிருந்து கொலப்பள்ளி கடைவீதி உட்பட பல்வேறு குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தண்ணீரில் தர்மாகோல் மற்றும் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது .இந்த தண்ணீரை பருகும் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நோய்த்தொற்று வர வாய்ப்புள்ளது ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த கிணற்றை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் அண்மையில் ஊராட்சி நகராட்சியில் உள்ள கிணறுகள் அனைத்தும் ஒரே நாளில் தமிழக அரசு சுத்தம் செய்ய உத்தரவிட்ட நிலையில் இந்த அவல நிலையை அரசு உரிய கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நெல்லியாலம் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் தலைவர் டாக்டர் ஜி. ரஜினிகாந்த் , செயலாளர் ஜோதி பிரகாஷ், பொருளாளர் மல்லிகா ஜோதி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.