மாவட்ட ஆட்சியரின் உத்தரவு செல்லாது என கனிமவளத்துறை கமிஷனர், அதிகாரி ஒருவர் பணி நீக்கத்தை ரத்து செய்துள்ளார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கனிமவள துறை உதவி இயக்குனராக இருந்த வள்ளல் மணல் கடத்தல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. திருப்பூரில் கனிமவளத்துறை அலுவலகத்திற்குள் குவாரி உரிமையாளர்கள், தவிர வேற யாரையும் அனுமதிக்கப்படவில்லை. விவசாயிகள் குறைத்தீர் கூட்டத்திலும் கூட பங்கேற்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் மீது தொடர் புகார் வந்ததை அடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியராக டாக்டர் வினித் அவர்கள் இறுதி நாள் பணியின் போது வள்ளலை பணியில் இருந்து விடுவித்தார்.
இதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். கடந்த 18-ம் தேதி பணி விடுப்பு பெற்றதைத் தொடர்ந்து கனிம வளத்துறை கமிஷனர் ஜெயகாந்தன் ஆட்சியருடைய உத்தரவு செல்லாது எனக் கூறி மீண்டும் வள்ளலை பணியில் நியமிக்க உத்தரவிட்டு உள்ளார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.