நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா உப்பட்டி பஜார் பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் இச்சாலையானது கூடலூர் மற்றும் கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரிக்கு செல்லும் பிரதான சாலையாகும் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் சுற்றுலாப் பயணிகள் அதிகமான பேர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர் இச்சாலையில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையாகும் இந்நிலையில் உப்பட்டி பஜார் பகுதியில் வாகனங்களை முறையாக நிறுத்தாததால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது காரணமாக நோயாளிகள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமம் ஏற்பட்டுள்ளது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து இடையூர் ஏற்பட்டுள்ளது அவசர உறுதி தாய் செய் மற்றும் ஆம்புலன்ஸ் 108 இப்பகுதியில் நின்று செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது நோயாளிகள் கர்ப்பிணிகள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது நோயாளிகள் உயிரிழக்க வாய்ப்புள்ளது ஆகவே இந்த வாகன நெரிசலை உடனடியாக சரி செய்ய காவல்துறை துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நெல்லியால நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் தலைவர் ரஜினிகாந்த் செயலாளர் ஜோதி பிரகாஷ் பொருளாளர் மல்லிகா துணைத் தலைவர் ரவிச்சந்திரன் இணை செயலாளர் பார்த்திபன் விஜய மலர் ராமச்சந்திரன் சுரேஷ்குமார் சந்திரமோகன் செல்வம் நடராஜ் நாகராஜ் அசோக் குமார் கோரிக்கை விடுத்துள்ளனர்