அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் கலசங்கள் உடைப்பு... பொதுமக்கள் திரண்டனர்... போலீசார் விசாரணை

 திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ள பகுதியில் கலசங்கள், சிலைகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பெருங்கருணைநாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் பாடல் பெற்ற தலமாக இருப்பதும், சுந்தரர் பதிகம் பாடி முதலை உண்ட மதலையை மீட்ட தலமாக இருப்பதாலும் உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். 

மிகப்பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் நூற்றாண்டுகள் கடந்த பல அரிய சிற்பங்கள் உள்ளன. 

இந்த நிலையில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் நேற்று இரவு பூஜைகள் முடிந்து நடை சாத்தப்பட்டது. காலையில் திறந்து பார்த்த போது, கோவிலில் உள் பிரகாரத்தில் உள்ள பல்வேறு சிலைகள் உள்ள பகுதியில் பீடத்தின்கலசங்கள்  உடைத்து சேதப்படுத்தப்பட்டு உள்ளன. 

அறுபத்து மூவர் சிலைகளில் உள்ள கோபுர கலசங்கள் பல உடைக்கப்பட்டு சிதிலமாகவும், துணிகளும் சிதறிக்கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும், கோவிலில் உள்ள சிறு சிமெண்ட் கலசங்களும் உடைக்கப்பட்டு உள்ளன. 

உண்டியல் பூட்டு உடைக்க முயற்சி நடந்திருப்பதாக தெரிகிறது.

இத்துடன் கோவில் பிரகாரத்தில் உடைக்கப்பட்ட  சிதிலங்கள் கிடக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சிலைகள் ஏதாவது உடைக்கப் பட்டு இருக்கிறதா? களவு போய் உள்ளதா என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கோவிலுக்குள் யாரையும் அனுமதிக்காமல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்து போலீஸ் டி.எஸ்.பி., பவுல்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.  தடயவில் நிபுணர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். போலீஸ் விசாரணைக்கு பின்னரே முழு விவரங்கள் தெரிய வரும்.

கொள்ளை முயற்சியா? அல்லது சமூக பதட்டத்தை உருவாக்க இந்த செயலை செய்திருக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தகவலறிந்து அங்கு வந்த பொதுமக்களும், புதுப்பாளையம் ராயம்பாளையம் பகுதி சேர்ந்த சன்னை மிராசுகள்,  இந்து முன்னணி அமைப்பினரும், பாஜக உள்ளிட்ட அமைப்பினரும் கோவில் முன்புறம் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர் 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையில் விசாரனை மேற்கொண்டு வந்தனர்.

இதில் முருகன் சன்னதியில் வெண்களத்தால் செய்த வேல் மற்றும் சேவல் கொடியுள்ள இரண்டு வேல்கள் மற்றும் உபகாரப்பொருட்கள் காணவில்லை என்பது தெரியவந்தது.

 இதையடுத்து, கோயில் பெரிய கோபுரம் நிலை பகுதியில் ஒருவன் ஒழிந்திருப்பது தெரிய வந்து போலீசார் அவனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவிநாசியை அடுத்து சாவக்கட்டுபாளையம் அருகே உள்ள வெள்ளமடை பகுதியைச் சேர்ந்த சரவண பாரதி (32) என்பதும், இன்று அதிகாலை 4 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட புகுந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவனிடமிருந்து வெண்கலத்தால் ஆன வேல், சேவல் கொடி வேல் மற்றும் உபகாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

     

Previous Post Next Post