சத்தியமங்கலம் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இன்று அதிகாலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தீமிதித்தனர். இதில் பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி குண்டம் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டார்.
ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம், பண்ணாரியில் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகுவிமரிசை யாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து, பண்ணாரி மாரியம்மன்., சருகு மாரியம்மன் சப்பர திருவீதி உலா, கடந்த 21-ந் தேதி இரவு முதல் பண்ணாரி மற்றும் சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்றது. கடந்த 28-ந்தேதி இரவு கோவிலை சென்றடைந்தது. இதையடுத்து கோவில் வளாகத்தில் கம்பம் சாட்டப்பட்டது. செவ்வாய்கிழமை குண்டம் இறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 நாட்களுக்கு முன்னரே வந்திருந்து குண்டம் இறங்க காத்திருந்தனர். இந்த நிலையில் திங்கட்கிழமை குண்டம் பூப்போடுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு முழுக்க பக்தர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அதிகாலையில் கோவில் பூசாரி ராஜசேகர் அக்னியில் பூப்பந்தினை போட்டு பூஜை செய்து, முதலாவதாக குண்டம் இறங்கினார். பின்னர் பூசாரிகள், கோயில் பரம்பரை அறங்காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட லட்சத்திற்திற்கும் அதிகமான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் பவானிசாகர் எம்.எல் .ஏ.பண்ணாரி, இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் அதுவலர்கள், சத்தி ஒன்றிய சேர்மன் கே.சி.பி. இளங்கோ, அதிமுக சத்தி தெற்கு ஒன்றியச்செய லாளர் என்.சிவராஜ், கொமாரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர்.எஸ்.எம்.சரவணன், சும்பிரமணியன்,. உள்ளிட்ட லட்சக்கணக்கானபக்தர்கள் குண்டம் இறங்கினார்கள்.
பல பெண்கள் கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கினார்கள். விழாவிற்கு ஈரோடு மாவட்ட போலீஸ் எஸ்.பி., டாக்டர் சசிமோகன் தலைமையில், திருப்பூர் எஸ்.பி., சசாங் சாய் உள்ப்ட 4 மாவட்ட எஸ்.பி.,க்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். ஏ.எஸ்.பி.,அய்மென் ஜமால் உள்ளிட்ட 1600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழா ஏற்பாடுகளை கோவில், இந்து அறநிலையத்துறை துணை ஆணையரும், செயல் அலுவலருமான இரா. மேனகா தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கே.சிகருப்பண்ணன், மாவட்ட கவுன்சிலர் பிரபாகரன், கோவில் பரம்பரை அறங்காவலர்கள் புருசோத்தமன், ராஜாமணி தங்கவேலு, புஷ்பலதா கோதண்டராமன், மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.