தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் நடைபெற்ற (இப்தார்) நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார்.
தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "மத வேறுபாடுகளற்ற மத உணர்வை நாம் அனைவரும் மதிக்க வேண்டும், இந்நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்த பிரஸ் கிளப்பிற்கு எனது நன்றியை கூறிக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் இணைந்து வாழ வேண்டும். அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பது ஏன் என்பது குறித்து, ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் மாவட்ட தலைவர் அப்பாஸ், மற்றும் பிரஸ் கிளப் செயற்குழு உறுப்பினர் அகமது ஜான் ஆகியோர் விளக்கி பேசினார்.
இந்நிகழ்வில், பிரஸ் கிளப் தலைவர் காதர் மைதீன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் மாரிமுத்து ராஜ், துணைத் தலைவர் லட்சுமணன், இணைச் செயலாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் அருண், வசீகரன், இசக்கி ராஜா, ஆத்தி முத்து, சிதம்பரம், மோகன்ராஜ், முத்துராமன், ராஜன், ரவி, மாணிக்கம், பேச்சிமுத்து, சாமிநாதன் உள்ளிட்ட பிரஸ் கிளப் நிர்வாகிகள், பத்திரிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.