சித்திரைத் திருவிழாவின் 6ம் ளான வெள்ளிக்கிழமை சுந்தரேஸ்வரரும், மீனாட்சியம்மனும் ரிஷப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருஞானசம்பந்தர் மூன்று வயது பாலகனாக இருந்த போது, அவரது தந்தை சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் கோவிலுக்கு அழைத்து சென்றார். குளக்கரையில் அமர வைத்து விட்டு நீராட கிளம்பினார். நீண்ட நேரமானதால் பசியால் வாடிய சம்பந்தர் அழுதார். அவருக்கு பாலூட்ட அம்பிகையோடு சிவன் அங்கு வந்தார். சம்பந்தரை தூக்கிய அம்பிகை பொற் கிண்ணத்தில் ஞானப்பால் கொடுத்து விட்டு அங்கிருந்து மறைந்தனர்.
கரையேறிய சிவபாத இருதயர், பால் சிந்திய வாயோடு நின்ற சம்பந்தரிடம், உனக்கு பாலூட்டி யது யார்? என கோபித்தார். அப்போது சம்பந்தர், தோடுடைய செவியன், என்ற முதல் தேவாரப் பாடலை பாட, அம்மையப்பராக ரிஷப வாகனத்தில் காட்சியளித்தனர். அதனை இன்று நாம் தரிசிப்பதாக ஐதீகம். ஞானசம்பந்தரின் தந்தைக்கு காட்சியளித்தது போல், இன்று அம்மனும் சுவாமியும், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.