கோவில்பட்டி நகரில் பல இடங்களில் அரசியல் கட்சிகளா மற்றும் தனியார் வணிக நிறுவனங்கள் விளம்பர டிஜிட்டல் போர்டுகள் ஜோராக வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் முழுவதும் மறைக்கும் வகையில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அதே போல் லெட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து கோவில்பட்டி நகருக்குள் செல்லும் வழியில் மின் கம்பத்தில் விளம்பர டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
இவைகள் உதாரணம் மட்டுமே... கோவில்பட்டி நகரில் பல இடங்களில் விதிமுறைகளை மீறி விளம்பர டிஜிட்டல் போர்டுகள் காட்சியளிக்கிறது.. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மெளனமாக இருப்பது ஏனோ ... உயிர் பலிகள் எதுவும் ஏற்பட்ட பின்னர் தான் நடவடிக்கை எடுப்பார்கள் போல
டிஜிட்டல் போர்டுகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகள் கோவில்பட்டி நகருக்கு மட்டும் பொருந்தது போல..