சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாநகர காவல்துறை, அன்புடன் திருப்பூர் அறக்கட்டளை மற்றும் இணைந்த கரங்கள் அறக்கட்டளை சார்பாக 34வது சாலை பாதுகாப்பு வாரம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. 


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருப்பூர் மாநகர காவல்துறை துணை ஆணையர் வனிதா தொடங்கி வைத்தார். திருப்பூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர்கள் பிச்சையா, ரத்தினகுமார் மற்றும் சரவணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அன்புடன் திருப்பூர் அறக்கட்டளையின் தலைவர் மோகன் கே.கார்த்திக், இணைந்த கரங்கள் அறக்கட்டளையின் தலைவர் துரை ஆகியோரது ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திரா சுந்தரம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். மாநகராட்சி அலுவலக சிக்னல் அருகில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன போட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. சாலை பாதுகாப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள், அங்கி அணிந்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. வாகனங்களின் முகப்பு விளக்கில் ஒளியை மங்கச் செய்யும் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. முறையாக தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓட்டி வந்த பயணிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 
Previous Post Next Post