குப்பை வண்டியில் சென்று பொதுமக்கள் குறை கேட்ட திருப்பூர் மாநகராட்சி மண்டல தலைவர் கோவிந்தராஜ்

திருப்பூர் மாநகராட்சியின் 2 வது மண்டல தலைவர் கோவிந்தராஜ் 32 வது வார்டுக்குட்பட்ட டிபிஆர் காலனி பகுதியில் வீடுகளுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறை கேட்டார். 


அப்போது டிபிஆர் காலனி, எம்.கே.ஜி.நகர், ஆதி திராவிடர் காலனி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் குறை கேட்டார். பொதுமக்களிடம் மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகளை பிரித்து வழங்க பொதுமக்களை அறிவுறுத்தினார். வீட்டு குடிநீர் இணைப்பு கேட்ட பொது மக்களிடம் குடிநீர் இணைப்பு வழங்கிட உறுதி அளித்தார். 


அங்குள்ள காலி இடத்தில் சமுதாய கூடம் கட்டிட ரூ.25 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் அவர் ஆதி திராவிடர் காலனி, எம்.கே.ஜி நகர், டி. பி.ஆர் காலனி பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பிரச்சினைகளை கேட்டறிந்தார். அப்போது மூன்று சக்கர குப்பை சேகரிக்கும் வாகனத்தில் சென்று குப்பைகளை பெற்றுக் கொண்டே பொதுமக்களிடம் குறை கேட்டார். வாரம் இருமுறை சாக்கடை கால்வாய்களை தூய்மை செய்யவும் மாநகராட்சி பணியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

Previous Post Next Post