கோவையில் கோனியம்மன் கோவில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பிற்பகல் 2:30 மணியளவில் திருத்தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது. தேர் நிலை திடலில் துவங்கிய இந்த தேரோட்டம் ஒப்பணக்கார வீதி வழியாக பிரகாசம் பகுதியை வந்தடைந்தது.
தொடர்ந்து பெரிய கடைவீதி வழியாக வைசியாள் வீதியை அடைந்து மீண்டும் தேர் நிலை திடலை வந்தடைந்தது. தேர் வலம் வரும் பகுதி முழுவதும் திரண்டு இருந்த பொதுமக்கள் உப்பு மற்றும் மிளகை வீசி அம்மனை வழிபட்டனர். தேரோட்டத்தை காண கோவை மட்டுமின்றிபல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்ததால் பெரும் கூட்டம் காணப்பட்டது/
தேர் சுற்றி வரும் பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணிகளை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.