பாலாறு வேளாண்மை கல்லூரி ஊரக வேளாண் பணி அனுபவ திட்டம் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த சின்ன கந்திலி கிராமத்தில் பெண் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் " இந்திய விவசாயத்தில் பெண்களின் பங்கு " குறித்து விளக்கி கூறப்பட்டது. பின்பு விவசாயிகளுக்கு வேளாண் சம்பந்தமாக செயல் விளக்கத்தை குழு மாணவர்கள் மணிகண்டன், பரமகுரு, மாதவன், விக்னேஷ், ஆரிஃப், அஃப்சர், மோனிஷ், பவித்ரகுமார், மதிஷ், நவீன் குமார், நாகவெங்கடசாயி ஆகியோர் செய்து காட்டினர். அத்துடன் அவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் நண்மைகள் பற்றியும் இராசயன உரத்தின் தீமைகள் பற்றியும் கூறப்பட்டன. இக் கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.