நெல்லை பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை நகரை சேர்ந்த முகமது ரப்பானியின் மனைவி பாத்திமுத்து சபராள் (46). இவரும், இவரது மகள் செய்யது. அலி பாத்திமாவும் நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே மானங்காத்தானில் உள்ள உறவினர் வீட்டில் துக்கம் விசாரிக்க நெல்லையில் இருந்து கோவில்பட்டிக்கு புறப்பட்ட அரசு பஸ்ஸில் ஏறி பயணித்தனர். கயத்தாறு வந்ததும் இருவரும் இறங்கினர். அப்போது பாத்திமுத்து சபராள் தனது பையை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் செல் போன் மற்றும் ரூ.4,500 ஆகியன ஓடும் பஸ்சில் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் இது குறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் பஸ்சில் கருப்பு உடை அணிந்தபடி பயணித்த இருபெண்கள் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறினார். அதன்பேரில் எஸ்ஐ அந்தோனி திலிப் மற்றும் போலீசார், கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை விரட்டிச் சென்று நிறுத்தியதோடு சந்தேகத்திற்குரிய இரு பெண்களை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள், திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி யைச் சேர்ந்த பிரியா மற்றும் அவரது சகோதரி மது என்பதும், இருவரும் ஒருவ ரையே திருமணம் செய்ததும் மேலும் இவர்கள் பாத் சபராளிடம் ஓடும் பஸ்சில் பயணித்தபோது செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், இருவரையும் கைது செய்து, செல்போன், பணத்தை மீட்டதோடு இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.