அவசரகதியில் தொடங்கப்பட்ட வாறுகால் பணிகள் - கிடப்பில் போடப்பட்டதால் வீட்டிற்குள் செல்லவே அவதிப்படும் மக்கள்..

 

அந்தரத்தில் நடக்க வைத்த அவல நிலை - கேட் இல்லை என்பதால் இரவு பகலாக வீட்டில் காவல் காக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்...

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி விஸ்வநாத  நகர். இந்த நகரில் கடந்த மாதம் 4ந்தேதி வாறுகால் அமைக்கும் பணி  ஊராட்சி நிர்வாகம் சார்பில் தொடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அந்த நகரில் முகப்பின் ஒரு பகுதியில் அதிகமான மின்கம்பங்கள் அடுத்தடுத்து இருக்கும் இடத்தில் அதனை அகற்றி மாற்று ஏற்பாடு செய்யமால் அப்படியே வாறுகால் பணிகளை தொடங்கியுள்ளனர். 

இதற்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் எதையும் காதில் வாங்கி கொள்ளமால் பணிகளை தொடங்கி தற்பொழுது அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. 

வளைந்து நெளிந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வாறுகாலில் மேலும் பணிகள் மேற்கொள்ள அப்பகுதியில் உள்ள சில வீடுகளில் ஒன்றை அடி இடம் வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகம் கேட்டுள்ளனர். எவ்வித முன் அறிவிப்பு, திட்டமிட்டு செய்யமால் தற்பொழுது எங்கள் இடத்தினை கேட்டால் நாங்கள் எப்படி தரமுடியும் என்று கூற மேற்கொண்ட பணிகள் எதுவும் நடைபெறமால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பணிகள் பாதியில் நிற்பதால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வே சிரமப்பட்டு தான் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கம்பு கட்டியும், நாற்கலியை வைத்தும் தான் செல்ல வேண்டிய சூழ்நிலை. 

ஒரு வீட்டில் வாறுகால் பணிக்காக நுழைவு வாயில்கேட்டையும் எடுத்து விட்டார்கள். ஏற்கனவே அந்த வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் தற்போதும் கேட் இல்லை என்பதால் வேறு வழியில்லமால் காலை முதல் இரவு வரை அந்த குடும்பத்தினர் வீட்டின் முன்பு அமர்ந்து காவல் காத்து வருகின்றனர்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தினந்தோறும் அப்பகுதி பொது மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை, தங்களுக்கு வாறுகால் வேண்டாம், வீட்டிற்குள்ள செல்ல வழிவகை செய்யுங்கள் என்று காலில் விழாத குறையாக அதிகாரிகளிடம் கேட்டு வருகின்றனர்.

தற்பொழுது அமைக்கப்படும் பகுதிக்கு எதிர்ப்புறம் மின்கம்பங்கள் குறைவு, போதுமான இடம் இருந்து அப்பகுதியில் வாறுகால் அமைக்கமால், சிலரின் சுயலாபத்திற்காக தங்கள் பகுதியில் வாறுகால் அமைப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேட்ட போது, பணிகள் தொடங்கும் போது எவ்வித தகவலும் தங்களிடம் தரவில்லை, தந்து இருந்தால் எங்களுடைய பொறியாளரை கொண்டு ஆய்வு செய்து பிரச்சினை இல்லமால் நடவடிக்கை எடுத்து இருப்போம் என்று கூறுகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பல இன்னல்களை அப்பகுதி மக்கள் சந்தித்து வருவதால் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இடம் தர மறுத்த மக்களை மறைமுகமாக மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

சரியாக திட்டமிட்டு பணிகளை செய்யமால் வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post