உலகிலேயே மிகவும் மோசமான ஓட்டுனர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடம் பிடித்துள்ளது. சிறந்த ஓட்டுனர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.
அண்மையில் compare the market என்ற காப்பீடு நிறுவனம் ஒன்று உலகளாவிய பொது போக்குவரத்து பற்றி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மோசமான ஓட்டுனர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் பாதுகாப்பில் 2.17 புள்ளிகளுடன் தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது. 2.28 புள்ளிகளுடன் பெரு 2ம் இடத்திலும் 2.28 புள்ளிகளுடன் லெபனான் 3ம் இடத்திலும் 2.34 புள்ளிகளுடன் இந்தியா 4ம் இடத்திலும் 2.36 புள்ளிகளுடன் மலேசியா 5ம் இடத்திலும் உள்ளன.
அதே போல சிறந்த ஓட்டுனர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 4.57 புள்ளிகளுடன் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. 4.02 புள்ளிகளுடன் நெதர்லாந்து 2ம் இடத்திலும் 3.99 புள்ளிகளுடன் நார்வே 3ம் இடத்திலும் 3.91 புள்ளிகளுடன் எஸ்டோனியா 4ம் இடத்திலும் 3.90 புள்ளிகளுடன் சுவீடன் 5ம் இடத்திலும் உள்ளன. இந்தியாவில் சாலை பாதுகாப்பில் அதிகமான விபத்துகள் ஏற்படும் நகரமாக இந்திய தலைநகர் புதுடெல்லி உள்ளது. மேலும் இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் என அனைத்தும் அதிகப்படியான சாலை விபத்துகள் ஏற்படும் வரிசையில் உள்ளன. டெல்லியில் விபத்துகள் அளவு 20.8/100% என்ற அளவில் உள்ளது. மும்பை இரண்டாவது இடத்தில் 18.8/100% அளவுடன் உள்ளது.