கோவை -நாகர்கோவில் ரயில் ஒரு மாதத்துக்கு ரத்து... முழு விபரம்... தினசரி பயணிக்கும் பணியாளர்களுக்கு பெரும் பாதிப்பு

 ரயில் எண்.16321 நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூருக்கு தினமும் இரவு 7 மணிக்கு  சென்றடையும் ரயிலானது, விருதுநகர் .-கோயம்புத்தூர் இடையே 09.02.2023 முதல் 06.03.2023 வரை பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து விருதுநகர் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும். மேற்குறிப்பிட்ட தேதிகளில் விருதுநகரில் இருந்து கோயம்புத்தூர் வரை இயக்கப்படாது.

அதே ரயில் மறுமார்க்கமாக ரயில் எண்.16322 கோயம்புத்தூரில் இருந்து  காலை 8.00 மணிக்கு  நாகர்கோவிலுக்கு  புறப்படும் ரயிலானது, 09.02.2023 முதல் 06.03.2023 வரை கோவை- விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். கோவையில் இருந்து விருதுநகர் வரை ரயில் இயக்கப்படாது; மேற்குறிப்பிட்ட தேதிகளில் விருதுநகரில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரை செல்லும்.

ரயில் எண்.16721 கோவையிலிருந்து  மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும்  தினசரி ரயில் 09.02.2023 முதல் 04.03.2023 வரை திண்டுக்கல் . - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். கோவையிலிருந்து திண்டுக்கல்  வரை மட்டுமே ரயில் இயக்கப்படும். மேற்கூறிய தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து மதுரை வரை இயக்கப்படாது.

ரயில் எண்.16722 மதுரையில் இருந்து  கோயம்புத்தூருக்கு 12.15 மணிக்கு சென்றடையும் செல்லும் தினசரி ரயில்,  மதுரை - திண்டுக்கல் இடையே 09.02.2023 முதல் 05.03.2023 வரை பகுதி ரத்து செய்யப்படும். மதுரையில் இருந்து திண்டுக்கல் வரை ரயில் இயக்கப்படாது; மேற்கூறிய தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு கோவை வரை இயக்கப்படும்.

10, 13, 17, 20, 24 மற்றும் 27 பிப்ரவரி, 2023 (6 நாட்கள்) ஆகிய தேதிகளில் சண்டிகரில் இருந்து புறப்படும் ரயில் எண்.12688 சண்டிகர் - மதுரை இருவார விரைவு ரயிலானது ஈரோடு - மதுரை இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படும். மேற்கண்ட தேதிகளில் சண்டிகரில் இருந்து புறப்படும் ரயில் சண்டிகரில் இருந்து ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும்; ஈரோட்டில் இருந்து மதுரைக்கு இயக்கப்படாது.

 12, 15, 19, 22, 26 பிப்ரவரி மற்றும் 01 மார்ச், 2023 (6 நாட்கள்) ஆகிய தேதிகளில் (6 நாட்கள்) மதுரையில் இருந்து புறப்படும் ரயில் (எண்.12687) மதுரை - சண்டிகர் இருவார விரைவு ரயில், மதுரை - ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். . மேற்குறிப்பிட்ட தேதிகளில் மதுரையில் இருந்து புறப்படும் ரயில் மதுரையில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படாது. ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சண்டிகர் வரை செல்லும்.

14, 21 மற்றும் 28 பிப்ரவரி, 2023 (3 நாட்கள்) ஆகிய தேதிகளில் ஓகாவிலிருந்து புறப்படும் ரயில் எண்.16734 ஓகா - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ், சேலம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலே குறிப்பிட்ட தேதிகளில் ஓகாவிலிருந்து புறப்படும் ரயில் ஓகாவிலிருந்து சேலத்திற்கு மட்டுமே இயக்கப்படும்; சேலத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்படாது.

 ரயில் எண்.16733 ராமேஸ்வரம் - ஓகா வாராந்திர எக்ஸ்பிரஸ், 17, 24 பிப்ரவரி மற்றும் 03 மார்ச், 2023 (3 நாட்கள்) ஆகிய தேதிகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது, ராமேஸ்வரம் - சேலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேற்குறிப்பிட்ட தேதிகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து சேலத்திற்கு இயக்கப்படாது; அது சேலத்திலிருந்து புறப்பட்டு ஓகா வரை செல்லும்.

இந்த தகவல் தென்னக ரயில்வேயால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டவாள பராமரிப்பு பணிக்காக இந்த ரயில் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது ரெகுலர் ரயில் பயணிகள் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களை பெரிய அளவில் பாதிக்கும் என பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 




Previous Post Next Post