திருப்பூர் மாநகர் மாவட்ட அமமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மா.பா.ரோகிணிகிருஷ்ணகுமார் ஆகி
இந்த விழாவில், பொதுமக்கள் 500 பேருக்கு பிரஷர் குக்கர், பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டுகள், சேலை, வேஷ்டி, அரிசிப்பைகள் ஆகியவை நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி பேசும்போது கூறியதாவது:
மக்கள் செல்வர் பண்பாளர் அண்ணன் டிடிவி.தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க, புரட்சித்தலைவி தங்கத்தாரகை அம்மா அவர்களின் 75 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இங்கு சிறப்பாக நடக்கிறது. தலைமைக்கும், அன்புக்கும் இலக்கணமாக இந்த நாட்டில் வாழ்ந்து காட்டிய ஒரே தலைவி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். பெண்கள் நலனுக்கான பல திட்டங்களை தந்து பெண்கள் நிம்மதியாக வாழ வழி செய்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஒவ்வொரு பெண்ணின் வீட்டிலும் ஒரு குண்டுமணி தங்கமாவது இருக்க வேண்டும் என்பதற்காக தாலிக்கு தங்கம் திட்டத்தை கொண்டு வந்து ஒவ்வொரு பெண்ணின் திருமணத்துக்கும் தங்கத்தாலி வழங்கினார் புரட்சித்தலைவி அம்மா. கடினமாக உழைக்கும் பெண்களின் கைகள் பூப்போன்று இருக்க வேண்டும் என்பதற்காக பெண்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கியவர் அம்மா அவர்கள் தான். அம்மாவுக்கு பின்னால் சின்னம்மா அவர்கள் தான் கழகத்தை வழி நடத்தி இருக்க வேண்டும். எடப்பாடிக்கும் அதிமுகவிற்கும் என்ன சம்பந்தம்? இன்றைக்கு அடித்த கொள்ளையை பாதுகாக்க கட்சியை வைத்துக் கொண்டு இருக்கிறார் எடப்பாடி. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுகிறவன் அமமுக தொண்டனுமல்ல. தலைவர் டிடிவி தினகரனுமல்ல...நமக்கென்று ஒரு தலைவர் அது அண்ணன் டிடிவி.தினகரன் அவர்கள். நமக்கென்று ஒரு சின்னம் அது குக்கர் சின்னம். எங்கள் சின்னத்தில் தான் நீங்கள் அன்னத்தை வைக்கிறீர்கள். இரட்டை இலை காசுக்கு மோசம் போய் விட்டது. இன்று திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு ரோடு உருப்படியாக இல்லை. சாக்கடை அள்ள, குப்பை அள்ள ஆட்கள் இல்லை. தெருவிளக்கு எரிவது இல்லை. ஆனால் எதிர்க்கட்சி என்று சொல்கிற அதிமுக இதையெல்லாம் கேட்பதில்லை. திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. எவரிடத்திலும் துணிந்து சொல்லுங்கள், நாம் கொள்கைக்காக கட்சி நடத்துகிறவர்கள். நாம் லட்சியத்துக்காக இருப்பவர்கள். நாம் விலை போகிற கூட்டமல்ல என்று சொல்லுங்கள். வந்தால் உன்னோடு.. வராவிட்டால் தனியாக.. எதிர்த்தால் உன்னையும் எதிர்த்து அமமுக நடக்கும் என்று சொல்லுங்கள். இவ்வாறு முன்னாள் மேயர் அ.விசாலாட்சி பேசினார்.
இந்த கூட்டத்தில், கீதா, பகுதி கழக செயலாளர், சுகம் வீர கந்தசாமி. எம் சிவக்குமார், என் முருகன், ஆர் சுதாகர், கே ராஜாங்கம், ஹைதர் அலி, நாகேஸ்வரன், வொர்க் ஷாப் பாலு, சதீஷ்குமார், சார்பு அணி செயலாளர் சீமான் டி கே குணசேகர் எம் பாலகிருஷ்ணன் எம் திலகவதி எல் முத்துக்குட்டி எச் சுரேஷ் ராஜா கே பழனிசாமி டி ஆர் சத்யா, ஏ.மாபு பாஷா, எஸ் பிரியா, எஸ் நாகேந்திர குமார், ஹாஜிரா பானு, பச்சமுத்து, மனோகர், ஜான்மென்டன்சா, புல்லட் ராஜா, கலியமூர்த்தி, நந்தகுமார், லோகு, தெய்வநாதன், சுந்தரலிங்கம், கார்த்திகேயன், கோபிநாத், பிரபு, சதீஷ், ஆர்கே, கார்த்திகேயன், ரமேஷ், அருண், தனஞ்செழியன், தங்கராஜ், ஷீபா, விமலா, சீபா, ரீட்டா, ஜெயந்தி, ராணி, சுகந்தி, ஜெய், கணேஷ், கோகுலம், மணி, சீமான், சின்னகாளை, நத்த காட்டு மணி,வினு பிரியா, அப்பாஸ், நவ்ஃபீல் ஆஷிக், இக்பால், சல்மான், தலைமை கழக பேச்சாளர்கள் குமரவேல், ஆசிக் பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.