தமிழக அரசின் சார்பில் தமிழர் திருநாளான தைப் பொங்கலை முன்னிட்டு பச்சரி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1000- ரொக்கம் வழங்கப்படுகிறது.
அதனையொட்டி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ரேசன் கடை ஊழியர்களுடன் இணைந்து, அப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
இத்திட்டத்தை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி சென்னையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவங்கி வைக்கிறார். அதன்பின் தமிழகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளன.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனையின்படி தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் டோக்கன் விநியோகிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 26வது வார்டு பகுதிக்குட்பட்ட ரேசன் அட்டைதாரர்களுக்கு மாமன்ற உறுப்பினர் மரிய கீதா பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கினார்.
மாநகர திமுக மாணவரணி துணை அமைப்பாளர் டைகர் வினோத், வட்ட பிரதிநிதி ஏகாம்பரம், ஜோசுவா உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.