புத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீஸ் எஸ்.பி., டான்ஸ் ஆடி மகிழ்ந்தார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் போலீசாருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
அவர் அனைவருக்கும் கேக் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் ஹவுசிங் போர்டு பகுதியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பாதுகாப்பு குறித்து ரோந்து சென்ற போது பொதுமக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக குழந்தைகளோடு ஜித்து ஜில்லாடி பாடலுக்கு மகிழ்ச்சியாக டான்ஸ் ஆடினார்.
இதனால் அப்பகுதி மக்கள் எஸ்.பி பாலகிருஷ்ணனை பாராட்டி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். அப்போது எஸ்.பி பாலகிருஷ்ணன் பேசுகையில், ’எனது முகாம் அலுவலகத்தில் இருந்து நான் புறப்பட்ட போது எந்த நாட்டில் இருக்கிறோம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏதும் இல்லையே என்று நினைத்தேன். இங்கு பார்க்கும் போது பெரும் மகிழ்ச்சி பொங்கியது. இதே போல் அனைவரும் அனைத்து விழாக்களும் செய்யவேண்டும். பாதுகாப்புக்காக சி.சி.டி.வி பொறுத்த வேண்டும் என்று பேசினார்.